• Home  
  • பாஜக – சுதந்திர தின தேசியக் கொடி யாத்திரை
- Virudhunagar

பாஜக – சுதந்திர தின தேசியக் கொடி யாத்திரை

விருதுநகரில் பாஜக சார்பில் சுதந்திர தின தேசியக் கொடி யாத்திரை

விருதுநகரில் பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மாவட்ட அமைப்பாளர் தினேஷ் ராஜா தலைமையில் சுதந்திர தின தேசியக் கொடி யாத்திரை பெருந்திரளாக நடைபெற்றது.

விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, பாஜக நகர் மண்டல் அமைப்பாளர் கிருத்திகா மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் தேசியக் கொடி யாத்திரை பேரணி தொடங்கியது.

இப்பேரணி விருதுநகர் தெப்பம், மெயின் பஜார், மாரியம்மன் கோயில் மற்றும் ரயில்வே பீடர் ரோடு வழியாகச் சென்று, ரயில் நிலையம் முன்பு உள்ள காந்தி சிலை அருகில் நிறைவடைந்தது. அங்கு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்டப் பொறுப்பாளர் வெற்றிவேல் மற்றும் ஏராளமான கட்சியினரும் நிர்வாகிகளும் திரளாகக் கலந்துகொண்டனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.