• Home  
  • ஆடி கடைசி வெள்ளி – தவெக அன்னதானம்
- Virudhunagar

ஆடி கடைசி வெள்ளி – தவெக அன்னதானம்

விருதுநகரில் ஆடி கடைசி வெள்ளி – தவெக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில் முன்பு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தவெக நகர் மற்றும் மகளிர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.செல்வம் கலந்துகொண்டு பொதுமக்களுக்குத் தங்களது கரங்களால் அன்னதானம் வழங்கித் தொடங்கி வைத்தார்.

ஆடி கடைசி வெள்ளியையொட்டி கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் பொதுமக்களும் இந்நிகழ்ச்சியின் மூலம் பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில் தவெக நகரச் செயலாளர் ரசிகுமார் மற்றும் நகர, ஒன்றிய, மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்து உதவிகளைச் செய்தனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.