Thursday, 10 September 2026

Five Falls 360° 4K Video

Contact Info

  • Email: mail@barnmedia.in

  • Home  
  • தவெக ஆட்சியின் 100 நாள் நல்லாட்சி சாதனை விளக்கம்
- Virudhunagar

தவெக ஆட்சியின் 100 நாள் நல்லாட்சி சாதனை விளக்கம்

சிவகாசியில் தவெக ஆட்சியின் 100 நாள் நல்லாட்சி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பைபாஸ் நாலுமுக்கு ரோட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியின் 100 நாள் நல்லாட்சி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மேற்கு மாவட்டச் செயலாளரும், சிவகாசி சட்டமன்ற உறுப்பினருமான, தொழில் துறை அமைச்சர் செல்வி எஸ். கீர்த்தனா இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிச் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, தவெக அரசு பொறுப்பேற்று கடந்த 100 நாட்களில் நிறைவேற்றிய பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விரிவாக எடுத்துரைத்துச் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட சேலம் அம்சவேணி பொதுமக்களிடையே சிறப்பு உரையாற்றினார்.

சிவகாசி கிழக்கு ஒன்றிய நிர்வாகி எம். காளிராஜன், தொழில் துறை அமைச்சர் செல்வி கீர்த்தனாவுக்குச் சால்வை அணிவித்து வீரவாள் வழங்கிச் சிறப்பித்தார்.

தவெக மாவட்ட, நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களுடன் தவெக நிர்வாகி எம். ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்டனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.