• Home  
  • அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாளாக விலையில்லா மதிய உணவு
- Madurai

அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாளாக விலையில்லா மதிய உணவு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 900-வது நாளாக விலையில்லா மதிய உணவு – ஸ்டார் குரு டிரஸ்ட்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், ஸ்டார் குரு சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் தொடர்ச்சியாக 900-வது நாளாக விலையில்லா மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தினசரி 1,000 பேருக்கு 1,000 நாட்களுக்கு விலையில்லா மதிய உணவு வழங்கும் உயரிய லட்சியத்துடன் தொடங்கப்பட்ட இத்திட்டம், தற்போது வெற்றிகரமாக 900-வது நாளை எட்டியுள்ளது. டிரஸ்டின் நிறுவனர் ஸ்டார் குரு என்ற குருசாமி தலைமையில் இத்தொண்டுப் பணி தொடர்கிறது.

இந்நிகழ்ச்சியில் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவுடன், பழங்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் அவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள ஏதுவாகப் பிளாஸ்டிக் கூடை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனர் குருசாமி, இத்திட்டம் தனது லட்சியமான 1,000-வது நாளை எட்டும் விழாவில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களைச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள அழைக்க உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், உணவுக்காக வெயிலில் காத்துக்கிடக்கும் பொதுமக்களின் துயர் துடைக்க மருத்துவமனை வளாகத்திற்குள் உரிய இடம் ஒதுக்கித் தருமாறு அவர் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.