• Home  
  • சொக்கநாத சுவாமி ஆவணித் திருவிழா மண்டகப்படி
- Virudhunagar

சொக்கநாத சுவாமி ஆவணித் திருவிழா மண்டகப்படி

சொக்கநாத சுவாமி ஆவணித் திருவிழா – கொட்டகை அலங்கார கொத்தனார்கள் மற்றும் தொழிலாளர்கள் மண்டகப்படி

விருதுநகர் அம்மன் கோயில் திடலில், அருள்மிகு ஸ்ரீ சொக்கநாத சுவாமி கோயிலின் 57-வது ஆவணிப் பெருந் திருவிழாவை முன்னிட்டு, கொட்டகை அலங்கார கொத்தனார்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் அமைக்கப்பட்ட மண்டகப்படியில் சிறப்பு வழிபாடும் சுவாமி தரிசனமும் நடைபெற்றது.

இத்திருவிழா மண்டகப்படியில் ஸ்ரீ சொக்கநாத சுவாமி பிரியாவிடையுடன் பூத வாகனத்திலும், ஸ்ரீ மீனாட்சி அம்மன் அன்ன வாகனத்திலும், முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் மயில் வாகனத்திலும் தனித்தனிச் சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர்.

திருவிழாவைக் காண விருதுநகர் அம்மன் கோயில் திடல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மிகுந்த பயபக்தியுடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கொட்டகை அலங்கார கொத்தனார்கள் மற்றும் தொழிலாளர் சமுதாயத்தின் சார்பில் மண்டகப்படி சிறப்பாக நடத்தப்பட்டு, கலந்துகொண்ட பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.