• Home  
  • புதிய தமிழகம் கட்சித் தலைவர் பேட்டி
- Madurai

புதிய தமிழகம் கட்சித் தலைவர் பேட்டி

மதுரையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தவெக அரசு தனது 30 ஆண்டு கால காவல்துறைப் பாதுகாப்பைத் திரும்பப் பெற்றதாகவும், தவெக கூட்டணி முரண்பட்ட கூட்டணி என்றும் கடுமையாக விமர்சித்தார்.

தனக்கு கடந்த 30 ஆண்டுகளாக 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு, தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றதும் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

மாஞ்சோலை மற்றும் மேகமலையில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களை வெளியேற்றுவது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றும், சொந்த மக்களை அகதிகளாக்கும் இச்செயலைத் தடுத்து நிறுத்தி, 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தை முறையாக அமல்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தவெக அறுதிப்பெரும்பான்மை பெறாத நிலையில் முரண்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், விஜய் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டு அகலக்கால் வைத்தால் அது அவருக்கே ஆபத்தாக முடியும் என்றார். மேலும், காங்கிரஸ் கட்சி ஒருபோதும் இதனை ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

சமூகநீதித்துறை பெயர் மாற்றம் மற்றும் அமைச்சர் வன்னியரசு மற்றும் திருமாவளவனின் முரண்பட்ட கருத்துகளைக் கண்டித்து வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி பரமக்குடியில் பதாகைகள் ஏந்திப் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.