• Home  
  • மதுரை காந்தி மியூசியத்தில் “மகா சங்கமம்”
- Madurai

மதுரை காந்தி மியூசியத்தில் “மகா சங்கமம்”

மதுரை காந்தி மியூசியத்தில் “மகா சங்கமம்” உலக சாதனை நிகழ்ச்சி

தமிழர்களின் கலை மற்றும் கலாச்சாரத்தை உலக அரங்கில் பறைசாற்றும் வகையில், மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் 1,500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற “மகா சங்கமம்” என்ற மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், இசை நிகழ்ச்சிகள் மற்றும் தற்காப்புக் கலைகளான சிலம்பம், கராத்தே உள்ளிட்ட கலை வடிவங்களை ஒரே நேரத்தில் அரங்கேற்றிப் புதுமையான முறையில் உலக சாதனை படைத்தனர்.

வெறும் கலை நிகழ்ச்சியாக மட்டுமின்றி, இன்றைய இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப் பழக்கத்திற்கு எதிராக "போதைக்கு எதிராக அணிதிரள்வோம்" மற்றும் "தூய்மையான மதுரை" ஆகிய கருத்துகளை மையமாகக் கொண்ட விழிப்புணர்வு நிகழ்வுகளும் உறுதிமொழி ஏற்பும் இதில் நடைபெற்றன.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் கல்லாணை, கார்த்திகேயன், கோபிசன் மற்றும் ஸ்டார் குரு சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் குருசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும், உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவியர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பாராட்டு கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.