• Home  
  • FQL பிட்காயின் ஆன்லைன் முதலீட்டு மோசடி – பொதுமக்கள் மனு
- Madurai

FQL பிட்காயின் ஆன்லைன் முதலீட்டு மோசடி – பொதுமக்கள் மனு

FQL பிட்காயின் ஆன்லைன் முதலீட்டு மோசடி – பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் 'FQL' மற்றும் 'VG டிரேடிங்' செயலிகள் மூலம் பிட்காயின் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

FQL மற்றும் VG டிரேடிங் மொபைல் செயலிகள் மூலம் பிட்காயின் மற்றும் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் ஆசை வார்த்தை கூறி, மதுரை மாவட்டம் மேலூர், அலங்காநல்லூர் மற்றும் திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டப் பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் லாபம் கிடைப்பது போலக் காட்டப்பட்ட நிலையில், தற்போது தாங்கள் முதலீடு செய்த பணத்தை எங்களால் திரும்பப் பெற முடியவில்லை எனப் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்தனர்.

தங்களது கடின உழைப்புச் சம்பாத்தியத்தை முழுமையாக இழந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள், பணத்தை மீட்டுத் தரவும், மோசடி நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரி இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் திரளாகக் குவியினர்.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதால், அவர்களிடமிருந்து FQL மோசடி தொடர்பான புகார்களைப் பெற்று, விவரங்களைச் சேகரிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரத்யேகத் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. மேலும், அசாதாரண சூழலைத் தவிர்க்கக் காவல்துறையினர் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.