• Home  
  • தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க விழிப்புணர்வு பேரணி
- Virudhunagar

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

விருதுநகரில் நடைபெற்ற தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 12-வது மாநில மாநாட்டின் நிறைவு நாளான நேற்று, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகரில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டின் ஒரு பகுதியாக, விருதுநகர் அரசு மருத்துவமனை முன்பு தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நகராட்சி மைதானத்தை அடைந்தது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பேரணி நடத்தப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இம்மாநாட்டிற்காக வருகை தந்திருந்த ஏராளமான ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் கோஷங்களை முழங்கியபடியும், கோரிக்கை விளம்பரத் பலகைகளை ஏந்தியபடியும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.