மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் மற்றும் இந்திய குடியரசு கட்சி சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
மதுரை கோச்சடை பகுதியில் உள்ள நகராட்சி மண்டல நிர்வாக இயக்குநர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் மற்றும் இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் அன்புவேந்தன் தலைமை வகித்தார்.
மாநகராட்சியில் பல ஆண்டுகளாகப் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கு EPF, ESI உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் முறையாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தொழிலாளர் நல விதிகளைப் பின்பற்றாத ஒப்பந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய வார விடுப்பு மற்றும் பண்டிகை கால விடுப்புகளை வழங்குவதுடன், பிடித்தம் செய்யப்பட்ட தொகைகளை நிலுவையின்றித் திருப்பி வழங்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பை அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
- Madurai
துப்புரவு பணியாளர்கள் & ஓட்டுநர்களைப் பணி நிரந்தரம் – கவன ஈர்ப்பு போராட்டம்
துப்புரவு பணியாளர்கள் & ஓட்டுநர்களைப் பணி நிரந்தரம் – கவன ஈர்ப்பு போராட்டம்
