Thursday, 10 September 2026

Five Falls 360° 4K Video

Contact Info

  • Email: mail@barnmedia.in

  • Home  
  • முதல்வர் விஜய் போல வேடமிட்ட நகல் கலைஞர்
- Madurai

முதல்வர் விஜய் போல வேடமிட்ட நகல் கலைஞர்

முதல்வர் விஜய் போல வேடமிட்ட நகல் கலைஞருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த தம்பதி

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் மதி, தமிழக முதலமைச்சர் விஜய்யைப் போன்ற தோற்றத்துடன் வலம் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பிரபலமடைந்துள்ளார். இந்நிலையில், மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள தனியார் உணவு விடுதியில் தற்செயலாக அவரைச் சந்தித்த புதுமணத் தம்பதியினர் மற்றும் உறவினர்கள், அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடியை ஒத்த தோற்றமுடையவருடன் இணைந்து இவர் சமீபத்தில் உடுப்பியில் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது மதுரைக்கு வருகை தந்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த அவர், மாட்டுத்தாவணி சர்வேயர் காலனி பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதிக்கு உணவருந்தச் சென்றார். அதே நேரத்தில், திருமணமான கையோடு தனது உறவினர்களுடன் அங்கு வந்திருந்த புதுமணத் தம்பதி, முதல்வர் விஜயே நேரில் வந்திருப்பதாக எண்ணி மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

சென்னைக்குச் சென்று முதலமைச்சர் விஜய்யை நேரில் காண முடியாத ஏக்கம் தீரும் வகையில், அவரைப் போன்றே தோற்றமளித்த நகல் கலைஞர் மதியுடன் புதுமணத் தம்பதியினரும் அவர்களது உறவினர்களும் குழுவாக நின்று புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து மகிழ்ந்தனர். தற்போது இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.