• Home  
  • மஉகா கட்சி நிறுவனத் தலைவர் மு.கார்த்திக் பிறந்தநாள் விழா
- Virudhunagar

மஉகா கட்சி நிறுவனத் தலைவர் மு.கார்த்திக் பிறந்தநாள் விழா

மனித உரிமை காக்கும் கட்சி நிறுவனத் தலைவர் மு.கார்த்திக் பிறந்தநாள் விழா

மனித உரிமை காக்கும் கட்சி நிறுவனத் தலைவரும் நடிகருமான மு.கார்த்திக் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகரில் கட்சியின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விமரிசையாக நடத்தப்பட்டது.

விருதுநகர் சின்னப் பேராலி ரோடு கருப்பசாமி நகரில் அமைந்துள்ள வி.எம்.எம்.கே. மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். அங்குள்ள மாணவ-மாணவியருக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்களும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

மாணவ-மாணவியர் மற்றும் வளாகத்தில் உள்ள முதியவர்கள் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் கருப்பசாமி பாண்டியன், அருப்புக்கோட்டை ஒன்றிய செயலாளர் மகேந்திரன், துணைத் தலைவர் ஜீவராஜ், தலைவர் காளிராஜ் மற்றும் பல்வேறு நகர, ஒன்றிய நிர்வாகிகளும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.