• Home  
  • ரயில்களில் கஞ்சா & புகையிலை பறிமுதல்
- Virudhunagar

ரயில்களில் கஞ்சா & புகையிலை பறிமுதல்

விருதுநகர் ரயில்களில் கஞ்சா & புகையிலை பொருட்கள் பறிமுதல்

விருதுநகர் ரயில்களில் கஞ்சா & புகையிலை பொருட்கள் பறிமுதல் | 20.09.2026 | விருதுநகருக்கு இன்று காலை வந்த புருலியா விரைவு ரயிலில் எஸ்ஆர்பி யின் தனிப்படை சார்பு ஆய்வாளர் பெருமாள் மற்றும் தலைமை காவலர்கள் மாரித்துரை, கருப்பசாமி, மற்றும் காவலர் விக்னேஷ் ஆகியோர் அந்த ரயிலில் பொதுப் பெட்டியில் பயணிகள் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த கருப்பு டிராவல் பேக்கை சோதனை செய்தபோது அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது. மற்றும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டியில் சோதனை மேற்கொண்ட போது ஒரு சாக்கு பையில் 13.5 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ரயில்வே காவல்நிலைய சார்பு ஆய்வாளர் கார்த்திக் ரகுநாத் விசாரணை செய்து வருகிறார்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.