• Home  
  • பேருந்தில் விருதுநகர் எம்எல்ஏ ஆய்வு
- Virudhunagar

பேருந்தில் விருதுநகர் எம்எல்ஏ ஆய்வு

பேருந்தில் விருதுநகர் எம்எல்ஏ செல்வம் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை

விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நின்று செல்ல எம் எல் ஏ செல்வம் உறுதி - 21.09.2026.

பேருந்தில் பயணம் செய்த ஒரு பயணி அனுப்பிய வீடியோவின் அடிப்படையில் அந்தப் பேருந்தில் எம்எல்ஏ செல்வம் ஏறி நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை.

விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் ஒருசில பேருந்துகள் புறவழியாக செல்வதாக பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது.

இந்த வீடியோ விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம் கவனத்திற்கு சென்றதைத் தொடர்ந்து, அவர் சம்பவம் தொடர்பாக நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

இதன் ஒரு பகுதியாக, கள்ளிக்குடியில் இருந்து விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம் அவர்கள் நேரடியாக பயணித்து, அதற்கான பயணச்சீட்டையும் பெற்றார். அப்போது பேருந்து நடத்துநரிடம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்குமா என கேட்டபோது, “புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்கும்” என நடத்துநர் தெரிவித்தார். பின்னர் கண்டிப்பாக பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இடம் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, பயணிகள் மத்தியில் நிலவி வந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் முறையாக நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, இனிமேல் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளை முறையாக நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்வதாக சம்பந்தப்பட்ட பேருந்து நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர்.

பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு, புகார் வந்தவுடன் நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம் அவர்களின் நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.