• Home  
  • பரந்தூர் விமான நிலையம் மற்றும் திண்டுக்கல் வளர்ச்சிப் பணிகள்
- Dindigul

பரந்தூர் விமான நிலையம் மற்றும் திண்டுக்கல் வளர்ச்சிப் பணிகள்

பரந்தூர் விமான நிலையம் மற்றும் திண்டுக்கல் வளர்ச்சிப் பணிகள்

திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற பாஸ்போர்ட் அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்றாக மீனம்பாக்கத்தில் 5-வது முனையம் அமைக்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த அவர், திண்டுக்கல் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க எரியோடு - அக்கரைப்பட்டி இடையே சரக்கு ரயில் புறவழித்தடம் அமைக்க வான்வழி சர்வே பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகே திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், தேர்தல் வாக்குறுதிகளை அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.