• Home  
  • தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த்பிறந்தநாள்
- Virudhunagar

தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த்பிறந்தநாள்

பி.மீனாட்சிபுரத்தில் தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் 74-வது பிறந்தநாள் விழா

விருதுநகர் மேற்கு மாவட்டம், மேற்கு ஒன்றியம், மரூளுத்து அருகில் உள்ள பி. மீனாட்சிபுரத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

விருதுநகர் மாவட்டச் செயலாளர் செய்யது ஹாஜா செரீப் தலைமையில் பி. மீனாட்சிபுரத்தில் தேமுதிக கட்சிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கேப்டனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கணபதி மற்றும் கிளைச் செயலாளர் ராமசாமி ஆகியோரின் ஏற்பாட்டில், அப்பகுதி கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் தனசேகர், செயலாளர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய அவைத் தலைவர் சந்தானம், பொருளாளர் கணேசன் மற்றும் பல்வேறு லெவல் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் திரளான கிராம மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.