விருதுநகரில் சிஐடியு மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாநாடு | 20.06.2026 | விருதுநகர் என்.வி கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் அசோகன் முன்னிலை வகித்தார். சங்க கொடியை மூத்த தலைவர் நாராயணசாமி எற்றி வைத்தார். பொன்ராஜ் வரவேற்றார்.
நியாய விலைக் கடை ஊழியர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ் அஞ்சலித் தீர்மானத்தை முன் மொழிந்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் தேவா துவக்கி வைத்துப் பேசினார். வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் முனியாண்டி,வரவு செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சமர்பித்தனர். கூட்டுறவு ஊழியர் சங்க மாநில தலைவர் கௌதமன், சிஐடியு மாவட்டத் தலைவர் மகாலெட்சுமி, கிருஷ்ணராஜா, திருமலை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிஐடியு மாநில உதவித் தலைவர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். வரவேற்புக்குழு பொருளாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
முன்னதாக இரயில் நிலையம் அருகேயுள்ள காந்தி சிலை முன்பு கூட்டுறவு அமைப்பின் உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
- Virudhunagar
சிஐடியு மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாநாடு
விருதுநகரில் சிஐடியு மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாநாடு
