விருதுநகரில் ரயில்வே பாதுகாப்புப் படை எழுச்சி தின விழிப்புணர்வு | 20.09.2026 | விருதுநகர் ரயில் நிலையத்தில் இரயிலில் பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்வது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை இரயில்வே பாதுகாப்பு படையினர் செய்தனர்.
ரயில்வே பாதுகாப்பு படையின் 42 வது எழுச்சி தினத்தையொட்டி ரயில்வே பாதுகாப்பு படை இயக்குனர் சோனாலி மிஸ்ரா ஐபிஎஸ், தென்னக இரயில்வே ஐ.ஜி அருள்ஜோதி உத்தரவின் பேரில் மதுரை கோட்ட ஆணையர் பிரிட் வழிகாட்டுதலின்படி விருதுநகர் ரயில் நிலையத்தில் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இப்பிரச்சாரத்தின் போது ரயில் பயணிகள் அதிகப் பணம் மற்றும் தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை இரயில் பயணத்தில் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். சக பயணியர் மற்றும் அந்நியரிடமிருந்த உணவுப் பொருட்களை வாங்கி உண்ணக் கூடாது. நீண்ட நேர இரயில் பயணத்தின் போது இருக்கைக்கு அடியில் உள்ள சங்கிலியால் உடைமைகளை பூட்டி பாதுகாக்க வேண்டும். செல்போனை பத்திரமாக வைக்க வேண்டும். இரயிலில் இருந்து இறங்கும் முன் கொண்டு வந்த அனைத்துப் பொருட்களும் பத்திரமாக உள்ளதா என உறுதி செய்ய வேண்டும் என பயணிகளிடம் இரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
- Virudhunagar
ரயில்வே பாதுகாப்புப் படை எழுச்சி தின விழிப்புணர்வு
விருதுநகரில் ரயில்வே பாதுகாப்புப் படை எழுச்சி தின விழிப்புணர்வு
