சிவகாசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வெகு விமரிசையாக நிறைவு | 20.09.2026 | விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று சுமார் 30க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக வழிபாடு நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று அனைத்து பகுதிகளிலும் உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சிவகாசியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து துவங்கிய ஊர்வலம் 4 ரத வீதிகளின் வழியாக மேளதாளங்கள் முழங்கவும் சிவன், பார்வதி,விநாயகர்,அம்மன் உள்ளிட்ட சாமிகளின் வேடம் அணிந்து ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.வழி நெடுகிழும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மேலிருந்து மலர்களை தூவி விநாயகரை வரவேற்றனர்.இந்த விநாயகர் சிலைகள் முழுவதும் ஜக்கம்மாள் கோவில் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட தொட்டியில். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
- Virudhunagar
சிவகாசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
சிவகாசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வெகு விமரிசையாக நிறைவு
