• Home  
  • ‘வீ த லீடர்ஸ்’ மாநாடு மதுரையில் சிறப்பு பூஜை
- Madurai

‘வீ த லீடர்ஸ்’ மாநாடு மதுரையில் சிறப்பு பூஜை

வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் முதலாவது மாநில மாநாடு பொள்ளாச்சியில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மதுரையில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் 101 தேங்காய்களை உடைத்து சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளனர்.

வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் முதலாவது மாநில மாநாடு பொள்ளாச்சியில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மதுரையில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் 101 தேங்காய்களை உடைத்து சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளனர்.

பாஜகவிலிருந்து விலகி அண்ணாமலை தொடங்கிய ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் மிக முக்கிய முதலாவது மாநில மாநாடு, வரும் ஜூலை 12-ஆம் தேதி பொள்ளாச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாடு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் பல்வேறு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மதுரையில் இவ்வியக்கத்தின் உறுப்பினர் விஷ்ணு பிரசாத் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மதுரை நேரு ஆலால சுந்தர விநாயகர் திருக்கோவிலில் ஒன்று கூடினர். அங்கு அண்ணாமலையின் பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு, மாநாடு சிறக்க வேண்டி 101 தேங்காய்கள் உடைக்கப்பட்டன. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.