• Home  
  • காமராஜர் பிறந்தநாள் – அரசு உயர் அதிகாரிகள் மரியாதை
- Virudhunagar

காமராஜர் பிறந்தநாள் – அரசு உயர் அதிகாரிகள் மரியாதை

பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகர் சுலோச்சன் தெருவில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகர் சுலோச்சன் தெருவில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுகபுத்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல், துணை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ் குமார், கோட்டாட்சியர் கனகராஜ் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அவர்கள் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களும் பங்கேற்று, கல்விப் புரட்சியாளர் காமராஜரின் புகழைப் போற்றினர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.