• Home  
  • காமராஜர் பிறந்தநாள் – அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி மரியாதை
- Virudhunagar

காமராஜர் பிறந்தநாள் – அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி மரியாதை

கல்விப் புரட்சியாளர் பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா, இன்று விருதுநகரில் அரசு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கல்விப் புரட்சியாளர் பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா, இன்று விருதுநகரில் அரசு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

விருதுநகர் – மதுரை சாலையில் அமைந்துள்ள காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில், அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கௌதம் கோயல், மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.பி.செல்வம் ஆகியோர் பங்கேற்று, காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு அரசின் செய்தித்துறை சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்த விழாவில், விடுதலைப் போராட்ட தியாகியும், முன்னாள் முதல்வருமான காமராஜரின் தியாகத்தைப் போற்றும் வகையில் அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.