• Home  
  • நீட் தேர்வு 2026 – வேலம்மாள் போதிப் பள்ளி மாணவர்கள் சாதனை
- Madurai

நீட் தேர்வு 2026 – வேலம்மாள் போதிப் பள்ளி மாணவர்கள் சாதனை

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள வேலம்மாள் போதிப் பள்ளியைச் சேர்ந்த 124 மாணவர்கள், நீட் 2026 தேர்வில் 600-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள வேலம்மாள் போதிப் பள்ளியைச் சேர்ந்த 124 மாணவர்கள், நீட் 2026 தேர்வில் 600-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அகில இந்திய அளவில் 7 மாணவர்களும், தமிழக அளவில் 15 மாணவர்களும் தரவரிசையில் இடம் பெற்றுள்ளனர். இதில், வெங்கடபதி வேலாயுதம் 705 மதிப்பெண்களுடன் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

மேலும், மாணவர் சுடர் 696 மதிப்பெண்களுடன் தமிழக அளவில் மூன்றாம் இடத்தையும், ஜெய கிருஷ்ணா 695 மதிப்பெண்களுடன் ஆறாம் இடத்தையும், மாணவி சவிதா தமிழக அளவில் ஏழாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் பாலமுருகன், மாணவர்களை வாழ்த்தி, சாதனை புரிய ஊக்கப்படுத்தினார். வெற்றி பெற்ற மாணவர்கள், இப்பள்ளியின் முறையான பயிற்சி மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலே தங்களின் வெற்றிக்குக் காரணம் என நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

தேர்வு கடினமாக இருந்தபோதும், பள்ளியின் தொடர்ச்சியான பயிற்சி தங்களுக்குப் பெரும் உதவியாக இருந்ததாக மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர். கல்விச் சாதனையில் வேலம்மாள் போதிப் பள்ளியின் இந்த வெற்றி, அப்பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.