• Home  
  • மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
- Madurai

மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்ட திருத்தத்தைக் கைவிட வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் புதிய உணவுப் பாதுகாப்புச் சட்ட திருத்தத்தை உடனே திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிய அரசின் புதிய உணவுச் சட்ட திருத்தமானது, மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 மற்றும் ஐநா உடன்படிக்கைக்கு எதிரானது என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றம் சாட்டினர்.

அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ உணவு தானியத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மருத்துவச் செலவு மற்றும் வருமானம் இன்றித் தவிக்கும் மாற்றுத்திறனாளி குடும்பங்களின் உணவு உரிமையைப் பாதுகாக்கவும், அவர்களுக்கான அரசுத் திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.

மத்திய அரசைக் கண்டித்தும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.