• Home  
  • ஏ.ஏ.ஏ. பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
- Virudhunagar

ஏ.ஏ.ஏ. பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

ஆமத்தூர் ஏ.ஏ.ஏ. பொறியியல் கல்லூரியின் 9-வது பட்டமளிப்பு விழா

விருதுநகர் அருகே ஆமத்தூர் ஏ.ஏ.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 9-வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் எம். சேகர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், செயலாளர் முனைவர் கார்வண்ணன், தாளாளர் முனைவர் கணேசன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர் அபிஷேக் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயக்குநர் முனைவர் கந்தபாபு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார்.

விழாவில், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் பட்டம் பெற்று அண்ணா பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவி செல்வபிரியா சிறப்பு விருந்தினரால் நினைவுக்க்கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேலும், கடந்த ஆண்டில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு, 2021-2025 கல்வியாண்டைச் சேர்ந்த சுமார் 200 மாணவ, மாணவியர்கள் தங்கள் பட்டங்களைப் பெற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுத் திறனை மேம்படுத்தி, தொழில்முனைவோர் மனப்பான்மையுடன் வாழ்வில் உயர வேண்டும் என மாணவர்களை ஊக்கப்படுத்திய சிறப்பு விருந்தினரின் உரையோடு விழா இனிதே நிறைவுபெற்றது.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.