• Home  
  • தவெக போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Madurai

தவெக போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி

தவெக மகளிர் அணி போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரையில் தமிழக வெற்றிக் கழக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ தங்கபாண்டி தலைமையில் பெண்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

TVK மதுரை மாநகர் தெற்கு மாவட்டம் மகளிர் அணி சார்பில் "விளித்தெழு இளையோனே" என்ற தலைப்பில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது. மதுரை மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான தங்கபாண்டி மற்றும் நிர்வாகி அபிநாத் சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும் திரளான பெண்கள் இந்நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். கலைமாமணி கோவிந்தராஜ் தலைமையிலான கலைக்குழுவினரின் பறை இசை, கரகாட்டம் மற்றும் எளிய மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடகம் அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சியின் நிறைவில், போதைக்கு எதிரான உறுதிமொழியை எம்.எல்.ஏ தங்கபாண்டியுடன் இணைந்து மகளிர் அணியினரும் பொதுமக்களும் எடுத்துக் கொண்டனர். போதையில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என எம்.எல்.ஏ தங்கபாண்டி கேட்டுக்கொண்டார்

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.