• Home  
  • KGHSS விளையாட்டு விழா
- Virudhunagar

KGHSS விளையாட்டு விழா

விருதுநகர் க்ஷத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா

விருதுநகர் க்ஷத்திரிய பெண்கள் பள்ளி நிர்வாகத்திற்கு பாத்தியப்பட்ட க்ஷத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு விழா, பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் தடை தாண்டி ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் உற்சாகமாக நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குச் சிறப்பு விருந்தினர்களான திருமதி ஞானஜெயந்தி மற்றும் திருமதி மெர்லின் ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.

விழாவில், பள்ளி நிர்வாகத்தின் புரவலர் திராவிட மணி, தலைவர் பாலாஜி, செயலாளர் ரத்தினவேல், உபதலைவர் ரம்யா, இணைச் செயலாளர் ஹரிஹர பாலாஜி மற்றும் பொருளாளர் பிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளைப் பள்ளியின் தலைமை ஆசிரியை அமுதா மற்றும் ஆசிரியைகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.