• Home  
  • வைகையாற்றில் மகா ஆரத்தி
- Madurai

வைகையாற்றில் மகா ஆரத்தி

வைகையாற்றில் கோலாகலமாக நடந்த மகா ஆரத்தி

ஆடிப்பெருக்கை முன்னிட்டு, வைகை நதியைப் போற்றும் வகையிலும் அதைப் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் மகா ஆரத்தி நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இயக்கத்தின் தலைவர் ராஜன் இந்நிகழ்விற்குத் தலைமை தாங்கினார்.

இந்த விழாவில், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. கோபிசன், பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் ஞானசம்பந்தன், அட்சயபாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு, சமூக ஆர்வலர்கள் இல. அமுதன் மற்றும் நேதாஜி சுவாமிநாதன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

வைகை நதிக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க மகா ஆரத்தி காட்டப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தியதோடு, வைகை நதியைத் தூய்மையாகப் பாதுகாக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய தவெக எம்.எல்.ஏ. கோபிசன், வைகை நதியை லண்டன் தேம்ஸ் நதி போல மாற்றி அங்கு படகு சவாரி (போட்டிங்) செல்ல தனக்கு ஆசை இருப்பதாகவும், வைகையாற்றில் நிரந்தரமாகத் தண்ணீர் செல்லும் திட்டங்களைச் செயல்படுத்த அமைச்சர் அண்ணனிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பேராசிரியர் ஞானசம்பந்தன், காசியில் நடப்பது போன்ற பிரம்மாண்டமான தீபாரதனை மதுரையில் வைகை கரையில் நடப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.