• Home  
  • 15 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்
- Madurai

15 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்

15 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம் – எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்கள் 15 ஆண்டுகளாக விடுத்து வந்த நீண்டநாள் போக்குவரத்துக் கோரிக்கை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வி.ஓடைப்பட்டி - பெரியார் பேருந்து நிலையம் மற்றும் பெரியார் பேருந்து நிலையம் - செல்லூர் - குலமங்கலம் ஆகிய இரண்டு புதிய அரசு பேருந்து சேவைகளை மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அ. விஜய் அன்பன் கல்லாணை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். வி.ஓடைப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய பேருந்துக்கு மலர் தூவிச் சேவையைத் தொடங்கிய அவர், பொதுமக்களுடன் பேருந்திலேயே ஏறிப் பயணம் செய்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

இந்த புதிய பேருந்து சேவைகள் மூலம் தினசரி வேலைக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் முதியவர்களின் போக்குவரத்துச் சிரமம் பெருமளவில் குறையும். காலை மற்றும் மாலை வேளைகளில் தலா இரண்டு முறை இயக்கப்பட உள்ள இந்தப் பேருந்துகள் அப்பகுதி மக்களின் அன்றாடப் பயணத்திற்குப் பெரும் வசதியாக அமையும்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்தச் சேவையை சாத்தியப்படுத்திய எம்.எல்.ஏ-விற்கு அப்பகுதி மக்களும், மாணவர்களும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.