தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மகனின் புகைப்படங்களுடன் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் போஸ்டர் ஒன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை புறநகர் கிழக்கு ஒன்றியம் சார்பில் மதுரையின் முக்கியப் பகுதிகளில் இந்தப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்தப் போஸ்டரில், முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது பின்புறம் அவரது மகன் இருப்பது போன்ற புகைப்படமும், உடன் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கல்லணை மற்றும் அமைச்சர் நிர்மல் குமார் ஆகியோரின் படங்களும் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, இப்போஸ்டரில் இடம்பெற்றுள்ள, "தலைவன் அங்கு போகணும்னு அவசியமில்லை, போகணும்னு நினைச்சாலே போதும்... தமிழகத்தை நோக்கி சீறிப் பாய்கிறது காவேரி" என்ற வாசகங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. காவிரி நீர் உரிமை மற்றும் மேகதாது அணை விவகாரங்களை ஒப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள இந்தப் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களிலும் மதுரையிலும் தீயாய் பரவி வருகிறது.
- Madurai
மதுரையில் தவெக போஸ்டர் – புதிய சர்ச்சை
மதுரையில் தவெக போஸ்டர் – காவேரி விவகாரத்தில் புதிய சர்ச்சை
