• Home  
  • இந்து நாடார்கள் உறவின்முறை பொதுக்குழுக் கூட்டம்
- Virudhunagar

இந்து நாடார்கள் உறவின்முறை பொதுக்குழுக் கூட்டம்

விருதுநகர் வடக்கு இந்து நாடார்கள் உறவின்முறை பொதுக்குழுக் கூட்டம்

விருதுநகர் வடக்கு இந்து நாடார்கள் உறவின்முறையின் வருடாந்திரப் பொதுக்குழுக் கூட்டம், மதுரை ரோடு என்.ஜி.ஓ. காலனி பகுதியில் உள்ள ஏ.ஆர்.எம். மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சங்கத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், செயலாளர் நாகேந்திரன் வரவேற்புரையாற்றி ஆண்டு அறிக்கையைச் சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து, பொருளாளர் காந்தீபன் 2025-26ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கையைச் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றார்.

கூட்டத்தில், பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா மற்றும் உறவின்முறையின் 2-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற உதவியாக இருந்த உறுப்பினர்கள், குடும்பத்தினர், பேச்சாளர்கள் மற்றும் இலவச மருத்துவ முகாம்களை நடத்திய மருத்துவமனைகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலில், சங்கத்தின் தலைவராக ராஜ்குமாரும், உப தலைவராக மூர்த்தியும், செயலாளராக பிரபுவும், துணை செயலாளராக ஜெகநாதனும், பொருளாளராக நாகேந்திரனும் மற்றும் ஆறு நிர்வாகக் குழு உறுப்பினர்களும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் அதிகாரியாக உப தலைவர் சண்முகநாதன் செயல்பட்டார். கூட்டத்தின் நிறைவில் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜெகநாதன் நன்றியுரையாற்றினார்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.