மதுரை மாவட்டம் வாடிப்பட்டி குலசேகரன் கோட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு மூலவர் ஜெயவரத ஆஞ்சநேயருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இக்கோயிலில், ஆஞ்சநேய பெருமான் ஒன்பது மூர்த்திகளாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். ஒவ்வொரு மாத அமாவாசை நாளிலும் இங்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இன்றைய ஆடி அமாவாசையை முன்னிட்டு ஜெயவரத ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து செந்தூரக் காப்புடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இச்சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேய பெருமானைத் தரிசித்து அருள் பெற்றனர்.
- Madurai
குலசேகரன் கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி அமாவாசை
வாடிப்பட்டி குலசேகரன் கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு அபிஷேகம்
