விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயிலில், ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து அம்மனைத் தரிசனம் செய்தனர்.
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, கோவிலும் அதன் கருவறையும் ஆயிரக்கணக்கான வண்ணமயமான வளையல்களால் கண்கவர் முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மூலவர் ஸ்ரீ பராசக்தி மாரியம்மனுக்கும் வளையல்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
இச்சிறப்பு வழிபாட்டைக் காண விருதுநகர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று அம்மனைத் தரிசனம் செய்த பக்தர்களுக்குப் பிரசாதமாக வளையல்களும் வழங்கப்பட்டன. ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற இத்திருவிழாவால் விருதுநகர் முழுவதும் ஆன்மீகச் சூழல் களைகட்டியிருந்தது
- Virudhunagar
பராசக்தி மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி – வளையல் அலங்காரம்
