தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் 80-வது சுதந்திர தின விழா மதுரை ரயில்வே காலனி செம்மண் திடலில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா தேசியக் கொடியேற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆற்றிய உரையின் முக்கிய விவரங்கள்:
வருவாய் உயர்வு: கடந்த நான்கு மாதங்களில் மதுரை கோட்டத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.490.16 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 8.28 சதவீதம் அதிகமாகும். இதில் பயணச்சீட்டு வருமானம் 13.34 சதவீதம் அதிகரித்து ரூ.328.57 கோடியாகவும், சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.125.44 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
பயணிகள் எண்ணிக்கை: கடந்த நான்கு மாதங்களில் மதுரை கோட்டத்தில் 1.71 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
அம்ரித் பாரத் திட்டப் பணிகள்: மதுரை கோட்டத்தில் 17 ரயில் நிலையங்கள் ரூ.292.52 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. இதில் காரைக்குடி, சோழவந்தான், மணப்பாறை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் நிலையங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பழனி, பரமக்குடி மற்றும் அம்பாசமுத்திரம் நிலையங்களின் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்குத் தயாராக உள்ளன.
மதுரை மற்றும் ராமேஸ்வரம் நிலையங்கள்: மதுரை ரயில் நிலையம் ரூ.413 கோடி செலவிலும், ராமேஸ்வரம் நிலையம் ரூ.112 கோடி செலவிலும் நவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட்டு வரும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
- Madurai
மதுரை கோட்ட ரயில்வே வருமானம் உயர்வு
மதுரை கோட்ட ரயில்வே வருமானம் ரூ.490.16 கோடியாக உயர்வு
