இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, விருதுநகர் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மருத்துவ சேவை அணி மற்றும் ஏ.என்.டி. கல்வி, மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
அறக்கட்டளை தலைவர் டாக்டர் ஜெயராஜ் சேகர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில்
எலும்பியல், காது, மூக்கு, தொண்டை, நுரையீரல், பிசியோதெரபி, அக்குபஞ்சர் மற்றும் பல் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிறப்புச் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகரைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் இப்பணிகளில் கலந்துகொண்டனர்.
முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். அவர்களுக்குத் தேவையான இலவச மருத்துவ ஆலோசனைகளும், இலவச மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
- Virudhunagar
தமுமுக – சுதந்திர தின இலவச பொது மருத்துவ முகாம்
விருதுநகரில் தமுமுக சார்பில் 80-வது சுதந்திர தின இலவச பொது மருத்துவ முகாம்
