சிவகாசியில் பட்டாசு தொழிலை முடக்கும் அரசைக் கண்டித்து, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இதில் பங்கேற்றுத் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஆய்வு என்ற பெயரில் முறையாக லைசென்ஸ் பெற்று இயங்கும் ஆலைகளை முடக்குவது எந்த வகையில் நியாயம் என தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். மேலும், தீபாவளி உற்பத்திப் பருவத்தில் இப்படியTன நடவடிக்கைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
ஒன்றரை லட்சம் கோடி முதலீடு ஈர்த்ததாகக் கூறும் அரசு, தன் காலடியில் உள்ள பட்டாசு தொழிலை நசிய விடுவது ஏன்? என்றும் அவர் வினவினார். கல்வி நிதி குறைப்பு மற்றும் மூன்று மாத கால ஆட்சித் தோல்வி போன்ற விவகாரங்களையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
- Virudhunagar
பட்டாசு தொழிலை காக்க ஆர்ப்பாட்டம்
சிவகாசி பட்டாசு தொழிலை காக்க ஆர்ப்பாட்டம்
