• Home  
  • இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் – புதிய உட்கட்டமைப்பு வசதிகள் திறப்பு
- Virudhunagar

இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் – புதிய உட்கட்டமைப்பு வசதிகள் திறப்பு

இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் – புதிய உட்கட்டமைப்பு வசதிகள் திறப்பு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.23.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய உட்கட்டமைப்பு வசதிகள் மக்களின் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா குத்துவிளக்கேற்றி புதிய கட்டடங்களை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த ஏதுவாக நவீன வசதிகளுடன் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் முடி காணிக்கை மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

வருகை தரும் பக்தர்களுக்குச் சுகாதாரமான முறையில் உணவு வழங்க ரூ.1 கோடி மதிப்பீட்டில் அன்னதான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் நிகழ்வுகள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக ரூ.8.44 கோடி மதிப்பீட்டில் விசாலமான விருந்து மண்டபம் உருவாக்கப்பட்டுள்ளது.

வணிக நடவடிக்கைகளை முறைப்படுத்தி, பக்தர்கள் தேவையான பொருட்களை எளிதாகப் பெற ரூ.12 கோடி மதிப்பீட்டில் 235 புதிய கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தென் மாவட்டங்களின் புகழ்பெற்ற இத்திருக்கோவிலுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இப்புதிய கட்டடங்கள் மூலம் மிகச் சிறந்த அடிப்படை வசதிகளும் ஒருங்கிணைந்த சேவைகளும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவர் ராமமூர்த்தி, செயல் அலுவலர் இளங்கோ மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.