தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகையான திரிஷா அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மதுரையில் முதன்முறையாக 'திரிஷா நற்பணி மன்றம்' தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம் எங்கள் அன்பு அக்கா திரிஷாவுக்கே என்ற வாசகங்களுடன் மதுரை முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
வீரமங்கை வேலுநாச்சியாரின் வழியில் வந்துள்ள திரிஷாவுக்கு அரசியலில் களமிறங்க வேண்டும் என ரசிகர்கள் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், "எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை" என்றும், "மதுரை மீனாட்சி தாய் ஆசியுடன்" தொடங்கும் இந்த நற்பணி மன்றப் போஸ்டர்களில், வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் திரிஷாவின் படங்களும் இடம்பெற்றுள்ளன.
திரிஷா ரசிகர்களின் இந்த அதிரடி போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
- Madurai
மதுரையில் திரிஷா பெயரில் புதிய போஸ்டர்கள்
தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகையான திரிஷா அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.