மதுரை மக்களே! மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என தவெக எம்.எல்.ஏ கல்லாணை அதிரடி உதவி எண்ணை அறிவித்துள்ளார்.
“லஞ்சம் இல்லா சேவை இயக்கம்” என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், பொதுமக்கள் 93630 80567 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு ரகசியமாக புகார் தெரிவிக்கலாம். இதற்கிடையில், திமுக கவுன்சிலர்கள் தங்களின் மக்கள் பணிகளுக்கு இடையூறு செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் வெறும் புலம்பல் என்று குறிப்பிட்ட அவர், மதுரை வளர்ச்சிக்கு 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட அறிக்கையை அரசுக்கு வழங்கியுள்ளதாகவும், மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்றும் தெரிவித்தார்.
எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் தவெக தொண்டர்கள் தங்களது மக்கள் பணியை தொடர்ந்து செய்வார்கள் என்று எம்.எல்.ஏ கல்லாணை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
- Madurai
மதுரை எம்.எல்.ஏ லஞ்ச ஒழிப்பு அறிவிப்பு
மதுரை வடக்கு தவெக எம்.எல்.ஏ லஞ்ச ஒழிப்பு அறிவிப்பு
