• Home  
  • பழனி நில மோசடி – சார்பதிவாளர் கைது
- Dindigul

பழனி நில மோசடி – சார்பதிவாளர் கைது

பழனி நில மோசடி – சார்-பதிவாளர் கைது

திண்டுக்கல் பழனி தண்டபாணி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி நில மோசடி வழக்கில், தலைமறைவாகியிருந்த சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

பழனி கோவில் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் ரூ.2 கோடிக்கு மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக, சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்பட 11 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இவ்வழக்கில் ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் பெற்றிருந்த ஜஸ்டின் மணிகண்டனுக்கு, நேற்று நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் தலைமறைவான நிலையில், எஸ்.பி. சஜிதா, டி.எஸ்.பி. அஜய் தங்கம் மற்றும் ஆய்வாளர் சந்தானலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், கொடைக்கானலில் தலைமறைவாகியிருந்த சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை இன்று மதியம் போலீசார் கைது செய்து திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.