• Home  
  • கலைஞர் கருணாநிதி 8வது ஆண்டு நினைவேந்தல்
- Virudhunagar

கலைஞர் கருணாநிதி 8வது ஆண்டு நினைவேந்தல்

கலைஞர் கருணாநிதி 8வது ஆண்டு நினைவேந்தல்

தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 8-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு விருதுநகர் தேசபந்து மைதானத்தில் அனுசரிக்கப்பட்டது.

முன்னாள் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திமுக நகர செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.தனபாலன், நகர்மன்றத் தலைவர் ஆர்.மாதவன், பொதுக்குழு உறுப்பினர்கள் மதியழகன், சுதாகர் மற்றும் பல்வேறு சார்பு அணி அமைப்பாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அனைவரும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.