விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12-வது தேசிய கைத்தறி நாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு கைத்தறி கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் என்.ஓ.சுகபுத்ரா குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.
சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் இணை இயக்குநர் சங்கீதா முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 20 பயனாளிகளுக்கு ரூ.11.57 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். குறிப்பாக, ஓய்வுபெற்ற நெசவாளர் குடும்பங்களைப் பாதுகாக்கும் குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 5 பேருக்கு ஓய்வூதிய ஆணைகளும் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, நெசவாளர்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் நோக்கில் அருப்புக்கோட்டையில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் பொது மருத்துவம், கண், பல் மற்றும் இருதயப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதால் ஏராளமான நெசவாளர்கள் பயனடைந்துள்ளனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பிரிதௌஸ் பாத்திமா, கைத்தறித்துறை உதவி இயக்குநர் பழனி குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்
- Virudhunagar
விருதுநகரில் தேசிய கைத்தறி நாள் விழா
விருதுநகரில் தேசிய கைத்தறி நாள் விழா
