• Home  
  • கொடைக்கானல் கொலை வழக்கு – ஆட்சியரிடம் மனு
- Dindigul

கொடைக்கானல் கொலை வழக்கு – ஆட்சியரிடம் மனு

கொடைக்கானல் கொலை வழக்கு – ஆட்சியரிடம் மனு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ராமர் என்பவரின் மரணத்திற்கு முறையான நீதி விசாரணை நடத்தக் கோரியும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தலித் விடுதலை இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த வடிவேல் மகன் ராமர், கடந்த 30-ஆம் தேதி மாலை ரகு என்பவரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இத்தாக்குதலில் ராமரின் உறவினர் பிரசாந்தும் படுகாயமடைந்தார். இந்நிலையில், முக்கியக் குற்றவாளிகளை இன்னும் காவல்துறை கைது செய்யவில்லை என்றும், வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிமுறைகளின்படி உடனடியாக நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

உயிரிழந்த ராமரின் குடும்பத்திற்கு உரிய நிதியுதவி, நிவாரணப் பொருட்கள் மற்றும் அவரது பத்தாம் வகுப்பு கல்வித் தகுதிக்கு ஏற்ப இளநிலை உதவியாளர் அரசு வேலை வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்துக் குற்றவாளிகளையும் உடனடியாகக் கைது செய்யாவிட்டால், அனைத்துக் கட்சிகளையும் இணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.