சிவகாசியில் ஆய்வு என்ற பெயரில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் மிரட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் சோதனை என்ற பெயரில் பட்டாசு ஆலைகளில் அத்துமீறிச் செயல்படுவதாகவும், முறையான காரணமின்றித் தற்காலிகத் தடை விதித்துத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்குவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆய்வு என்ற பெயரில் உரிமையாளர்களை அவமதிக்கும் வகையிலும், பணம் பறிக்கும் நோக்கிலும் செயல்படும் அதிகாரிகளின் நடவடிக்கைகளைத் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என விசிக சிவகாசி மாநகர மாவட்டச் செயலாளர் செல்வின் ஏசுதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
- Virudhunagar
பட்டாசு ஆலைகள் மிரட்டல் – விசிக மனு
பட்டாசு ஆலைகள் மிரட்டல் – விசிக ஆட்சியரிடம் மனு
