ஸ்ரீவில்லிபுத்தூர் தணிப்பாறைப் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதன் காரணமாக, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு இன்று (11.08.2026) அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தணிப்பாறைப் பகுதியில் பிடித்துள்ள காட்டுத்தீ மலையின் கீழ்ப்பகுதியை நோக்கிப் பரவி வருவதால், தீயை அணைக்கும் மற்றும் பாதுகாப்புப் பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நிலைமை முற்றிலும் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை சதுரகிரி மலைப்பகுதிக்குள் செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்படாது எனவும், பொதுமக்கள் வனத்துறையின் இந்த அறிவிப்புக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- Virudhunagar
சதுரகிரி மலை ஏற இன்று அனுமதி இல்லை
சதுரகிரி மலை ஏற இன்று அனுமதி இல்லை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
