ஆடி அமாவாசையை முன்னிட்டு, விருதுநகரில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது மறைந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
பித்ருக்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வதற்கு உகந்த நாளான ஆடி அமாவாசையையொட்டி, அதிகாலை முதலே கோவிலின் தீர்த்தக் குளக்கரைகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். வேத விற்பன்னர்களின் மந்திரங்கள் முழங்க, எள் மற்றும் தீர்த்தம் தெளித்துத் தங்களது மறைந்த முன்னோர்களுக்குப் பித்ரு கடன்களைச் செலுத்தி எள்ளும் தண்ணீரும் இறைத்துத் தர்ப்பணம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர்.
- Virudhunagar
விருதுநகரில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு
விருதுநகரில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு – சிவன் கோயிலில் திரளான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
