நடிகை திரிஷா குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மதுரை மாநகர் முழுவதும் திரிஷா நற்பணி மன்றத்தினர் கண்டனப் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
மதுரையின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்தப் போஸ்டர்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நடிகை திரிஷாவுக்கு ஆதரவாகவும், ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தும் நற்பணி மன்ற நிர்வாகிகளும் ரசிகர்களும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பான விவகாரங்கள் சமூக வலைதளங்களிலும் விவாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- Madurai
ஆர்.பி. உதயகுமாருக்கு எதிராக கண்டன போஸ்டர்
மதுரையில் ஆர்.பி. உதயகுமாருக்கு எதிராக திரிஷா நற்பணி மன்றம் கண்டன போஸ்டர்
