• Home  
  • சர்வதேச வுஷூ போட்டி – இரட்டை தங்கம் வென்று மாணவி சாதனை
- Dindigul

சர்வதேச வுஷூ போட்டி – இரட்டை தங்கம் வென்று மாணவி சாதனை

சர்வதேச வுஷூ போட்டி: இரட்டை தங்கம் வென்று திண்டுக்கல் மாணவி சாதனை

ஜார்ஜியாவில் நடைபெற்ற சர்வதேச வுஷூ போட்டியில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி ரேஷ்மி இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

ஜார்ஜியா நாட்டின் படுமி (Batumi) நகரில் நடைபெற்ற 'Batumi Open International Wushu Tournament' சர்வதேச வுஷூ போட்டியில், கேடட்ஸ் (12-14 வயது) பெண் பிரிவின் நீள் ஆயுதப் போட்டிகளில் (Long Weapons) ரேஷ்மி கலந்துகொண்டார். இப்போட்டியில் 'ஜியான்ஷு' (Jianshu) பிரிவில் 8.37 புள்ளிகளும், 'கியாங்ஷு' (Qiangshu) பிரிவில் 8.43 புள்ளிகளும் பெற்று இரண்டு தங்கப் பதக்கங்களை அவர் தட்டிச் சென்றார்.

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து சர்வதேச வுஷூ போட்டியில் பங்கேற்றுத் தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ள ரேஷ்மிக்கு, விளையாட்டு ஆர்வலர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.