• Home  
  • பழனி மடம் சொத்து மோசடி – 4 பேர் காவல்
- Dindigul

பழனி மடம் சொத்து மோசடி – 4 பேர் காவல்

பழனி மடம் சொத்து மோசடி – 4 பேர் காவல்

திண்டுக்கல் பழனி தண்டாயுதபாணி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை 3 நாட்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பழனி அடிவாரத்தில் உள்ள தண்டாயுதபாணி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி நிலம் வெறும் ரூ.2 கோடிக்கு மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக, சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மடத்தின் வாரிசுதாரர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, வழக்கறிஞர் அன்வர்தீன், இடைத்தரகர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

இதனிடையே, கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி, வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகிய 4 பேரையும் 7 நாள் காவலில் விசாரிக்கக் கோரி போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ன் மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த 4 பேரையும் இன்று மதியம் முதல் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) மதியம் வரை 3 நாட்கள் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நிபந்தனையுடன் உத்தரவிட்டுள்ளார்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.