Thursday, 10 September 2026

Five Falls 360° 4K Video

Contact Info

  • Email: mail@barnmedia.in

  • Home  
  • பாலியல் தொல்லை புகாரில் உரிய நடவடிக்கை கோரி மனு
- Dindigul

பாலியல் தொல்லை புகாரில் உரிய நடவடிக்கை கோரி மனு

பாலியல் தொல்லை புகாரில் உரிய நடவடிக்கை கோரி சிறுமி மனு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், வேடசந்தூரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கையில் தேசியக் கொடிய ஏந்தியும், வாயில் கருப்பு முகக்கவசம் அணிந்தபடியும் நீதி கேட்டுத் தனது குடும்பத்தினருடன் வருகை தந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தங்களது வீட்டின் அருகே வசிக்கும் கேசவன் என்பவர் சிறுமிக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை அளித்ததுடன், தற்கொலைக்கு முயன்றதாகவும் போக்சோ சட்டத்தின் கீழ் (குற்ற எண்: 22/2026) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், வழக்கை விசாரிக்கும் ஆய்வாளர் புவனேஸ்வரி வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாகவும், செல்வாக்கு மிக்க நபர் மிரட்டி வருவதால் உயிருக்குப் பாதுகாப்பு கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.